இந்திய குடிமக்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒரு ஆவணம் ஆதார் தான். எந்த ஒரு அரசு சம்பந்தமான டாக்குமெண்ட்டிற்கோ சர்டிபிகேட்டிற்கோ நாம் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் என்பது அவசியம். தற்போதைய சூழலில் ஆதாரை வைத்து பல மோசடிகள் நடக்கிறது. அதை தடுப்பதற்காக Masked ஆதார் என்ற ஒன்று வந்திருக்கிறது. இது என்ன இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இனி காண்போம்.

ஆதார் எண்களை வைத்தும் அதன் ஒடிபி சி வி வி அவர்களை வைத்தும் ஆதார் என்ஃபீல்டு பேமென்ட் சிஸ்டம் வைத்தும் பல மோசடிகள் நடைபெறுகிறது. இது பலருக்கும் கவலை அளிக்கும் விதமாகவே இருக்கும். மோசடிக்காரர்கள் பயோமெட்ரிக் சாதனங்கள் மூலமாக சிலிக்கான் கைரேகைகளை பயன்படுத்தி பலவிதங்களில் மற்றவர்களின் தனித்துவமான தகவல்களையும் பணத்தையும் ஏமாற்றி எடுத்து விடுகிறார்கள். நிதி நிறுவனங்கள் ஆதார் கார்டை Masked ஆதார் மூலம் உங்களது தனித்துவமான தகவல்களை லாக் செய்யுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
மக்களின் பிரைவசியை பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது தான் ஆதார் அட்டையின் மற்றொரு பதிப்பான Masked ஆதார். இது உங்களுடைய ஆதார் நம்பரில் முதல் எட்டு இலக்கங்களை மறைத்துவிட்டு கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும். மேலும் மற்ற விவரங்களான உங்களுடைய பெயர் புகைப்படம் மற்றும் QR கோடு போன்றவை அனைவரும் பார்க்கும் படி இருக்கும். இந்த Masked ஆதார் எல்லா இடத்திலும் செல்லக்கூடியது. அடையாளச் சரி பார்ப்புக்கு இந்த Masked ஆதாரை ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த Masked ஆதாரை நீங்கள் பெறவேண்டும் என்றால் UIDAI வெப்சைட்டில் Masked ஆதாரை pdf ஆக டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்தவுடன் அதை பிரிண்ட் செய்து ஆதார் அட்டை எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அடையாளத்திற்கு காண்பிக்கப்படும் ஹோட்டல் புக்கிங் பயணம் வேலை சம்பந்தமான சரிபார்ப்பு போன்ற வச்சிருக்கு நீங்கள் Masked ஆதாரை பயன்படுத்தலாம். ஆனால் KYC அரசு மானியங்கள் போன்றவற்றிற்கு முழு ஆதார் நம்பர் தேவைப்படும். அந்த மாதிரி இடங்களில் உங்களது ஒரிஜினல் ஆதாரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்போதுமே உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
