பிக்பாஸ் போனது வீணாகல.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சரவணன் விக்ரம்.. அதுவும் ஹீரோவாக..

By Soundarya on மார்கழி 14, 2024

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சரவணன் விக்ரம். தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார் .பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக   பிரபலமானவர்கள் ஏராளமாக இருந்தாலும் அவர்கள் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை எட்டியவர்கள் ஒரு சிலர்தான். குறிப்பாக பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் தற்போது சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவண விக்ரம் சம்பளம் இத்தனை லட்சமா..?

   

இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ் தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி வருகிறார் இதனைத் தொடர்ந்து மகிழ் இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் மூலமாக பேமஸான ஹீரோ என்றால் அது கவின் தான்.

   

article_image2

 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டாடா படத்தில் வெற்றிக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். பிளேடி பெக்கர்  படத்திலும் நடித்து பிரபலமானார். அந்த வரிசையில் சினிமாவில் இணையும் முனைப்போடு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கி இருப்பவர் சரவணன் விக்ரம்.

#image_title

இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். அவர் ஹீரோவாக நடித்துள்ள முதல் படத்தை பிரவீன் கே. மணி என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஹசிலி என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியுள்ளது. தளபதி விஜய் போல் ரில்ஸ் வீடியோக்களை வெளியிடும் இவருடைய இவர் அடுத்த தளபதியாக உருவேடுக்கிறாரா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.