திருமணமாகி 12 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த வரம்.. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரஜினி பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

By Nanthini on மார்கழி 14, 2024

Spread the love

தமிழில் ரஜினி மற்றும் கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு தோனி என்ற திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து ரஜினியுடன் கபாலி திரைப்படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். ரஜினியின் மனைவியாக கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் கதைக்களம் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி கொடுத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து படங்களில் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் பிசியாக நடித்து வருகின்றார்.

   

இவர் மருத்துவராக இருந்த போதிலும் சினிமாவில் இருந்த விருப்பத்தால் கடந்த 2005 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்தார். இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்ட் டெய்லருக்கும் ராதிகா ஆப்தேவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

   

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ராதிகா ஆப்தேவிற்கு கடந்த வாரம் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் செய்தியை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தனக்கு பிறந்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. இருந்தாலும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணம் ஆகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெற்றெடுத்துள்ள நடிகை ராதிகா ஆப்தேவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Radhika பதிவைப் பகிர்ந்துள்ளார் (@radhikaofficial)