நடிகரின் மனைவியிடம் போட்டுக் கொடுத்த விஜய்.. கடைசில மனுஷன் இப்படி கவுத்துட்டாரே..!

By Nanthini on மார்கழி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ஞானசம்பந்தம். இவர் பல்வேறு திரைப்படங்களுக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலமானவர். இவர் நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் திரைத்துறை பேராசிரியர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என்று பல துறைகளில் புகழ்பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகர். பல்வேறு திரைப்படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து பெயர் எடுக்கக் கூடியவர். பல்வேறு பட்டிமன்றங்களில் இவர் பரபரப்பு பேச்சாளராக சிரிப்பூட்டும் பேச்சாளராகவும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Welcome To TamilAuthors.com

   

விருமாண்டி, இதய திருடன், கைவந்த கலை, ஆயுதம் செய்வோம், சிவா மனசுல சக்தி, போராளி, குட்டி புலி, ரஜினி முருகன், சண்டக்கோழி 3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவ்வாறு பட்டிமன்றங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயுடன் பிகில் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், விஜய் கூட பிகில் படத்தில் நடிக்கும் போது ரொம்ப பயமாக இருந்தது. அமெரிக்காவுக்கு பட்டிமன்றம் செல்ல டிக்கெட் எல்லாம் போட்டுட்டேன்.

   

 

 

எல்லோரும் கேட்டாங்க நயன்தாராவுக்காக டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டீங்களா என்று, இல்ல விஜய்க்காக என்று கூறினேன். படத்துல முதல் ஷாட்டே 1500 ஜூனியர் ஆர்டிஸ்ட் இருப்பாங்க அந்த கல்யாண சீன் தான் வச்சாங்க. அந்த சீன்ல விஜய் ஆடிக்கிட்டே வருவாரு. நான் பேச முடியாமல் தடுமாறி நிறைய டேக் வாங்கினேன். ரொம்ப ஜாலியான மனுஷன். ஹாட் முடிஞ்சதும் வந்து பக்கத்துல உக்காந்து நல்லா பேசிகிட்டு இருப்பார்.

SS Music on X: "#Micheal & #Angel #ThalapathyVijay #Nayanthara from #Bigil  !! https://t.co/t3rjZRoGzl" / X

நயன்தாரா விஜய் எல்லோரையும் பார்ப்பதற்காக நான் என்னோட குடும்பத்தை கூட்டிட்டு போயிருந்தேன். அப்போ எங்க வீட்டு அம்மா கிட்ட விஜய் வந்து நல்லா போட்டு கொடுத்துட்டாரு. அமெரிக்காவுக்கு தமிழ் பேச போக சொன்னா இங்க வந்து நயன்தாரா கைய புடிச்சு நடந்துகிட்டு இருக்காரு இதெல்லாம் நியாயமா என்று அவங்க கிட்ட போட்டுக் கொடுத்துட்டாரு. ஏன் சார் நீங்க வரை இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று நானும் ஜாலியா பேசிட்டு இருந்தேன் என்று விஜய் உடன் நடித்த அனுபவம் குறித்து பேசி உள்ளார்.