தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான்.

சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் சினிமாவில் முதல் முதலில் அட்வான்ஸ் வாங்கியது சங்கர் சார் கிட்ட தான். வெயில் படத்துக்காக அவர்தான் எனக்கு முதலில் அட்வான்ஸ் கொடுத்தார்.

கைல அட்வான்ஸ் கொடுத்துட்டு, நீ காதல் படம் பண்ணி இருக்க வேண்டும், அது மிஸ் ஆயிடுச்சு, அதுல பண்ண வேண்டியதையும் சேர்த்து இந்த படத்துல சிறப்பா பண்ணிரு என்று என்கிட்ட சொன்னாரு. அவர்கிட்ட முதலில் அட்வான்ஸ் தொகையை வாங்கிகிட்டு வெயில் படத்தை நான் பண்ணிக் கொடுத்தேன். அவர்கிட்ட அட்வான்ஸ் தொகையை வாங்குவதனால் பொறுப்பா இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனசுக்குள்ள வந்துச்சு. இருந்தாலும் ஒரு மாதிரி பயத்தோட தான் படத்தை பண்ணி முடிச்சேன் என்ற ஜீவி பிரகாஷ் பேசியுள்ளார்.
