தமிழ் சினிமாவில் முன்னணி நடிக்கிறாக இருப்பவர் கமல்ஹாசன். தனது ஐந்து வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். ஐந்து வயதாக இருக்கும்போது களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான கமல்ஹாசன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

நடிகர் மட்டுமல்லாமல் அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார் கமல்ஹாசன். இவரின் அபாரமான எதார்த்தமான நடிப்பிற்கும் அழகான தமிழ் உச்சரிப்புக்காகவுமே பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். கமலஹாசன் படம் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு காதல் மன்னனாக வலம் வந்தார். 1970 80 90 2000களில் புகழின் உச்சியில் இருந்து வந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில் கமலஹாசன் மிகவும் விருப்பப்பட்டு அவரது ட்ரீம் ப்ராஜெக்ட் என்று சொல்லப்பட்ட மருதநாயகம் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் ஏதோ சில காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது. ஏன் இந்த படம் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற காரணத்தை இனி காண்போம்.
இந்த மருதநாயகம் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஒரு சர்வதேச நிறுவனமும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் மிகுந்த பொருட்சளவில் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது. இந்த படத்தின் பட்ஜெட் என்பது கோடியாக இருந்தது. தயாரிப்பு குழுவில் இணைந்திருந்த ஒரு சர்வதேச நிறுவனம் பல சிக்கல்களால் பின்வாங்கியது. படத்தை தயாரிக்க கமலஹாசன் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் இதை அவரால் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் இந்த திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தப் படத்தின் முப்பது நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு தான் இந்த படம் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு பல நேர்காணல்களில் என்னுடைய கனவு ப்ராஜெக்ட் மருதநாயகம் இதை பின்னாளில் வாய்ப்பு கிடைத்தால் அதன் கதையை சிறிது திருத்தி இன்றைய இளம் நடிகர்களை வைத்து அந்த படத்தை நான் சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் தயாரித்து இயக்குவேன் என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
