சினிமா ஜாம்பவான் ஷாருக்கானை 4வது இடத்திற்கு தள்ளி.. ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அனிமல் நாயகி..!

By Nanthini on மார்கழி 6, 2024

Spread the love

இன்டர்நெட் மூவி டேட்டா பேஸ் (IMDB) 2024 மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்களை பட்டியலிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்டார்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் டாப் 10 இந்திய நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த ஷாருக்கான் தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஷாருக்கானின் இடத்தை பிரபல நடிகை தான் தற்போது ஆக்கிரமித்துள்ளார்.

Tripti Dimri: From Underrated to Overrated—The Fame Rollercoaster!" : r/BollyBlindsNGossip

   

த்ரிப்தி டிம்ரி!

   

2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் டாப் 10 ஸ்டார்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் பாலிவுட் நடிகை த்ரிப்தி டிம்ரி முதலிடத்தை பிடித்துள்ளார். அனிமல் திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இவர்தான் இந்தியாவின் பிரபலமான ஸ்டார் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். தனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்ததை அவர்களை எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

 

சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்த ஷாருக்கான்.. அவருக்கு என்ன பிரச்சனை தெரியுமா? | Bollywood Star Shahrukh Khan went to America for eye treatment - Tamil Filmibeat

இவரைத் தொடர்ந்து அடுத்ததாக இரண்டாம் இடத்தை தீபிகா படுகோனே பிடித்துள்ளார். பாலிவுட் நடிகரான இஷான் கட்டார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக கடந்த வருடம் முதலிடத்தை பிடித்திருந்தால் ஷாருக்கான் இந்த வருடம் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கானுக்கு இந்த முறை நான்காவது இடம் தான் கிடைத்துள்ளது. இதனை அறிந்த ஷாருக்கான் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.