உடம்பில் பலவித மாற்றங்கள் நோய்கள் ஏற்படும். நம் உடல் சீராக இயங்குவதற்கு உடல் உறுப்புகள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு அடிக்கடி கை கால்கள் மரத்துப் போவது போன்ற உணர்வு ஏற்படும். இப்படி அடிக்கடி நடந்தால் நீங்கள் அதை அலட்சியம் செய்யக்கூடாது. அதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இனி காண்போம்.

நம் தலை உச்சி பாதம் முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கு ரத்த ஓட்டம் நன்றாக இருக்க வேண்டும். உடலில் ரத்தம் நன்றாக சீராக பரவும் போது தான் உடலின் ஓட்டத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் தான் நமக்கு கை கால் மரத்து போவது போன்ற உணர்வு ஏற்படும்.
சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் அந்த இடத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தான் தசை வலி தசை பிடிப்பு மரத்துப்போதல் போன்றவைகள் நமக்கு ஏற்படுகிறது. ஆனால் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் இது ஒரு சில நோய்க்கு அறிகுறியாக கூட இருக்கலாம்.

கை கால்கள் மரத்து போவதற்கு நீரழிவு நோய், நிமோனியா ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள் காரணமாக இருக்கலாம். இந்த கை கால்கள் மரத்துப் போவதை உடனடியாக கவனிக்காமல் அலட்சியம் செய்து விட்டால் அது நரம்பு பாதிப்பையும் பக்கவாதம் போன்ற நாள் பட்ட நோய்களையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
