கடலுக்கு நடுவில் ஸ்டேஜ் அமைத்து காதல் கணவருடன் முதல் கல்யாண நாளை கொண்டாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!

By Nanthini on மார்கழி 6, 2024

Spread the love

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை அமலாபால். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதாமரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்தார். அடுத்ததாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை அமலாபால் கர்ப்பம்.... குவியும் பாராட்டு.... | Etamilnews

   

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் இவர் ஏஎல் விஜயை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். பின்னர் விவாகரத்து பெற்ற நிலையில் பால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளனர்.

   

ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க - மனிதன்

 

இந்த நிலையில் அமலாபால் இன்று தனது முதல் கல்யாண நாளை தனது காதல் கணவருடன் கொண்டாடியுள்ளார். கடலுக்கு நடுவில் செட் அமைத்து தனது முதல் திருமண நாளை கொண்டாடிய வீடியோவை அமலாபால் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அமலா பாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Amala Paul பதிவைப் பகிர்ந்துள்ளார் (@amalapaul)