எல்லா பக்கமும் அமரன் எஃபெக்ட் தான்… படத்தின் திரையரங்க லாபம் இத்தனை கோடியா..? சாதனை படைத்த கமல்..!

By Soundarya on மார்கழி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவ்வாறு தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

   

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை அனைவருமே சிவ கார்த்திகேயனை பாராட்டி உள்ளனர்.

   

 

சமீபத்தில் ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்து பாராட்டும் பெற்றனர். அதேபோல சென்னையில் உள்ள ராணுவ குழு சிவகார்த்திகேயனை அழைத்தும் கௌரவப்படுத்தினர். ராணுவ வீரர்களும் இந்த திரைப்படத்தை பாராட்டியுள்ளனர். இப்படியான நிலையிலும் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

படம் முதல் நாளில் 42.3 கோடி வசூல் செய்திருந்த நிலையில் நாளுக்கு நாள் காட்சிகள் அதிகரிக்கப்பட்டதால் வசூல் சிறப்பாக இருந்தது. உலகளவில் 300 கோடி வசூல் சாதனை படைத்தது. படத்தை ரிலீஸ் செய்த எல்லா இடத்திலும் அமோகமான வரவேற்பு கிடைத்துள் நிலையில் தற்போது அமரன் படத்தின் திரையரங்க லாபம் மட்டுமே ரூ. 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.