எது தேவையில்லாத செலவு… எது தேவையான செலவு… பெரிய விஷயத்தை சிம்பிளா சொன்ன ரஹ்மான்!

By vinoth on மார்கழி 3, 2024

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

   

 

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானிடம் ஒரு நேர்காணலில் ’ நீங்க உங்க வாழ்க்கையில் செய்த Worst செலவு என்ன?’ எனக் கேட்டபோது அதற்கு சிறப்பான விளக்கம் அளித்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய பதில் “நான் கீபோர்டு பிளேயரா இருக்கும்போது ஒவ்வொரு இசைக்கருவியும் ஒரு லட்சம் ரூபாய். எனக்கு ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் சம்பளம். நான்கைந்து மாசம் சம்பாதித்தால்தான் அந்த இசைக்கருவியை வாங்கமுடியும். அப்ப எல்லாரும் என்ன சொல்வாங்கனா அப்ப ஒரு பிளாட் எண்பதாயிரம் ரூபாய்தான். பிளாட் வாங்கிப்போட சொல்வாங்க. பிளாட் வாங்கி வாடகைக்கு விடச்சொல்வாங்க. கார் வாங்க சொல்வாங்க. காருக்கு Depreciation உண்டு. காரை அதே விலைக்கு விற்கமுடியாது. அப்ப பிளாட் வாங்கி வாடகைக்கு விட்டவங்க இன்னும் வாடகைதான் வாங்கிட்டு இருக்காங்க.

I wanted to try new thing. நாம எல்லாம் ஒரு யுனிவர்சிட்டிக்கு போய் கத்துக்கலை. சொந்தமா முயற்சிசெய்து இசைக்கருவிகளை வாங்கி கத்துக்கிட்டோம். நாம கேரியருக்காக செய்ற எதுவுமே Worst செலவு இல்லை.” எனக் கூறியுள்ளார்.