சிவகுமார் கேட்ட உதவி… தாய் பாசத்திற்காக எம்ஜிஆர் செய்த செயல்.. நெகிழவைக்கும் சம்பவம்..!

By Nanthini on கார்த்திகை 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் தான் எம்ஜிஆர். தமிழ்நாட்டிற்கும் மூன்றெழுத்து மந்திரத்திற்கும் பிரிக்க முடியாத பந்தம் தொடர்ந்து இருந்து வருகிறது. அரை நூற்றாண்டைக் கடந்தும் தற்போது வரை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத மூன்று எழுத்து மந்திரம் தான் எம்ஜிஆர். கோபால மேனன் சத்தியபாமா தம்பதிக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர் தான் எம்ஜிஆர். இவர் இரண்டு வயது இருக்கும்போதே தந்த இறந்துவிட்டார். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த எம்ஜிஆர் பல துன்பங்களை அனுபவித்துள்ளார். தந்தை இறப்புக்கு பிறகு தாய் சத்தியபாமா தனது குழந்தைகளுக்காக வீட்டு வேலை செய்து அவர்களை வளர்த்துள்ளார்.

எம்ஜிஆர் 100 | 98 - அரசியல் எதிரிகளையும் ஈர்த்த பண்பு! | எம்ஜிஆர் 100 | 98 - அரசியல் எதிரிகளையும் ஈர்த்த பண்பு! - hindutamil.in

   

அது மட்டுமல்லாமல் ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். சில நேரங்களில் ஈரத் துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு பசி எடுக்காமல் இருக்க குப்புற படுத்து தூங்கி உள்ளனர். பக்கத்து வீட்டில் இருப்பவர் கொடுத்த நொய் அரிசியை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். சில சமயத்தில் எறும்பு புற்றுக்களை களைந்து அதில் இருக்கும் அரிசியை கூட சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இப்படி பல துன்பங்களை சந்தித்து தான் எம்ஜிஆர் வளர்ந்தார். இதனால் வறுமையில் வாடும் ஒருவரை பார்த்தால் இவர் பட்ட கஷ்டம் தான் இவருடைய நினைவுக்கு வரும். இதனால் தன்னால் முயன்றதை அனைவருக்கும் கொடுத்து உதவி மிகப்பெரிய வள்ளலாக திகழ்ந்துள்ளார் எம்ஜிஆர்.

   

எம்.ஜி.ஆர் அப்படி கேட்பார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. அழுதே விட்டேன்..  உருகும் சிவக்குமார்…. - CineReporters

 

அது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் தாய் பாசம் மிக்கவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அது எந்த அளவிற்கு என்றால், அந்த காலத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் தனக்கு வந்த சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதியாக வங்கியில் சேமித்து வைத்தார். அதிலிருந்து வந்த வட்டி தொகையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவி வந்தார். அந்த வருடம் நிகழ்ச்சியை எம்ஜிஆர் வைத்து நடத்த சிவகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரை சந்தித்தே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Image

சற்று யோசித்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் நீ மட்டும் தனியாக வந்திருக்கிறாயா என்று கேட்க அதற்கு சிவகுமார் இல்லை என்னுடன் எங்க அம்மா வந்திருக்காங்க அவங்க கொஞ்சம் கூச்ச சுவாபம் கொண்டவங்க காரில் அமர்ந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். உடனே சிவகுமாரை அழைத்துக் கொண்டு காருக்கே சென்ற எம் ஜி ஆர் அவர்களிடம் ஆசி பெற்றார். பிறகு அந்த விழாவுக்கு சிவக்குமார் அம்மா எம்ஜிஆரை அழைக்க அவரும் வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார். அதுவரை யோசித்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் தாய் அழைப்பு விடுத்ததும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டு பிறகு அந்த விழாவில் கலந்து கொண்டு அந்த விழாவை சிறப்பித்துக் கொடுத்தார்.