ABC

உடல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் ABC ஜூஸ்… இதில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா…?

By admin on கார்த்திகை 27, 2024

Spread the love

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் அவர்களது உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சிறுதானிய உணவுகள் சத்தான உணவுகள் சாப்பிடுவதற்கு தொடங்கி விட்டார்கள். அதில் ஒன்று சமீபத்திய காலங்களில் மிகவும் பிரபலமானது ABC ஜூஸ். இதை ABC ஜூஸ் குடிப்பதனால் நம் உடம்பில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

   

ABC ஜூஸ் என்பது ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஆகியவற்றை சம அளவில் எடுத்து செய்யப்படுவது தான் ABC ஜூஸ். இந்த ABC ஜூஸ் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த ஜூஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

   

இந்த ABC ஜூஸில் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ விட்டமின் B1 B2 B6 பி9 சி இ கே இரும்புச்சத்து துத்தநாகம் மெக்னீசியம் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸில் போன்ற பல சத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்த ஜூஸ் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் இதயம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளையும் சீராக இயங்க வைக்கிறது.

 

ABC ஜூஸில் அதிக நார்ச்சத்து பிற சத்துக்கள் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை எடுக்கக்கூடியது இந்த ஜூஸ். இந்த சத்து மிக ABC ஜூஸை குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் சரியாகிறது என்று கூறப்படுகிறது.