GoodBadUgly படத்திலிருந்து தேவி ஸ்ரீபிரசாத் திடீர் விலகல்… இவருக்கு பதில் இசையமைக்க போவது யார் தெரியுமா..?

By Soundarya on கார்த்திகை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தயாராகியுள்ளது. லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீதம் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளது. டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

ஆனால் அதற்கு முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் மற்றும் ஆதிக் என வித்தியாசமான கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

   

#image_title

 

கட்டாயம் அஜித்தின் திரைப்பாடல் வித்தியாசமான படமாக இந்த திரைப்படம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் வரலாறு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் அஜித் மூன்று ரோல்களில் நடிக்கின்றார். இதுவும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தைப் பற்றி தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் கங்குவா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் முதலில் கமிட்டாகியிருந்த நிலையில் படத்திலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக அனிருத் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.