சினிமாவில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்ற கனவுடன் திரைப்படங்களில் பணியாற்றி பிறகு டவுன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியவர் தான் ஆகாஷ் பாஸ்கரன்.

மேலும் இவர் திமுக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மிக நெருக்கமானவர். தற்போது இவர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

ஆகாஷ் கவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே. ரங்க நாதனின் மூன்றாவது மகள் தாரணையை திருமணம் செய்துள்ளார்.

தனது அப்பாவின் நிறுவனத்தை பார்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் தனக்கென்று தனியாக moonbaks நிறுவனத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றார் தாரணி.

இவர்களுடைய திருமணம் பிரம்மாண்ட முறையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் இருவரும் முன்நின்றி நடத்தி வைத்தனர்.

அது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் அன்பின் மகேஷ் உள்ளிட்டவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நயன்தாரா தனுஷ் விவகாரம் போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் இருவரும் நேற்றைய இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

அதுவும் நேர் எதிர் வரிசையில் அமர்ந்து கொண்டு யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இவர்களைத் தவிர்த்து அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி, தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் சிவன் மற்றும் ஆர். ரவிக்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

அனைவரும் புதுமண தம்பதிகளுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

