karthi

இயக்குனர்களின் இரண்டாம் படத்தில் நடித்து உயர்த்திவிட்ட நடிகர் கார்த்தி… அப்படி உருவான 5 வெற்றிப் படங்கள் இதோ…

By admin on கார்த்திகை 21, 2024

Spread the love

இங்கு திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வாய்ப்புதான் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் தன்னாலே மேலே எழுந்து வருவார்கள். ஒரு சிலர் அதாவது ஒரு உதவி கிடைத்து அதன் மூலம் முன்னேறி வருவார்கள். ஆனால் ஏற்கனவே உயரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை ஏத்தி விடுவார்களா என்று கேட்டால் அது ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் கார்த்தி.

இயக்குனர்கள் தங்களது முதல் படத்தின் மூலம் கவனத்தை பெற்றிருப்பார்கள் ஆனால் அடுத்தடுத்து அவர்களுக்கு சரியான வாய்ப்பு அமைய வேண்டும். அப்படி இயக்குனர்களின் திறமையை பார்த்து நடிகர் கார்த்தி இரண்டாவதாக அவர்கள் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளித்து நடித்துக் கொடுத்து அவர்களை உயர்த்தி விட்டு இருக்கிறார் நடிகர் கார்த்தி. அப்படி ஐந்து படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவை என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

   

1. நான் மகான் அல்ல : கபடியை மையமாகக் கொண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கி அறிமுகமான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது படத்தின் பாடல்களும் கூட பிரபலமாக இருந்தது. இவரின் இரண்டாவது திரைப்படம் ஆன நான் மகான் அல்ல திரைப்படத்தில் கார்த்தி நடித்திருந்தார். அதுவும் நல்ல விமரிசனங்களை பெற்றது.

 

2. கொம்பன்: சசிகுமார் லட்சுமிமேனன் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் குட்டி புலி. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இந்த இயக்குனர் முத்தையாவின் இரண்டாவது திரைப்படம் நான் கொம்பன். இந்தப் படத்தில் கார்த்தி நடித்தது நல்ல விமர்சனங்களை பெற்றது.

3. கைதி : மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை பார்த்து இவரது இரண்டாவது படமான கைதி திரைப்படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்பொழுது அடுத்த பாகம் தயாராகி வருகிறது.

4. அட்டக்கத்தி : தினேஷ் நடிப்பில் காமெடி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவானதுதான் அட்டகத்தி. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். இவரின் இரண்டாவது திரைப்படம் ஆன மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்த மெட்ராஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

5. தீரன் அதிகாரம் ஒன்று : வெளியான காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படத்தை இயக்கியவர் H வினோத். இதுதான் இவரின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு இவரின் இரண்டாவது படமான தீரன் அதிகாரம் ஒன்றில் கார்த்தி நடித்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல ஆக்சன் கொண்டு இருந்ததோடு நல்ல விமர்சனங்களையும் பெற்றது.