mamooty

ஒரே வருடத்தில் 36 படங்களில் நடித்தவர்… வியக்க வைக்கும் நடிகர் மம்மூட்டியின் திரைபயணம்…

By admin on கார்த்திகை 21, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவை புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் மம்முட்டி. இவரது இயற்பெயர் முகமது குட்டி பனபிரம்பில் இஸ்மாயில் என்பதாகும். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது மகன் துல்கர் சல்மான் பிரபலமான நடிகராவார்.

   

1971 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான அனுபவங்கள் பாலிச்சிகள் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் மம்முட்டி. தமிழில் அழகன், தளபதி, ஆனந்தம், மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் மம்முட்டி. தனது வாழ்நாளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் மம்முட்டி.

   

தனது அபாரமான நடிப்பிற்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரள மாநில திரைப்பட விருதுகள், 13 பிலிம்பேர் விருதுகள் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வென்றிருக்கார் மம்முட்டி. 1970 80 90 2000-களில் புகழின் உச்சியில் இருந்தார் மம்முட்டி.

 

கிட்டத்தட்ட தென்னிந்திய சினிமாவில் 50 வருடங்களுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருப்பவர் மம்முட்டி. இவரைப் பற்றிய சுவாரசிய தகவல் என்னவென்றால் 1983 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் மம்மூட்டி 36 படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு அடுத்ததாக 1986 ஆறாம் ஆண்டு 34 படங்களை நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் மம்முட்டி. சினிமாவின் மீது அத்தனை ஆர்வம் கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருக்கிறார் மம்முட்டி.