தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன.

ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் தயாரிப்பாளர் செய்த செயலால் படப்பிடிப்பையே ரத்து செய்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன் மற்றும் பேரரசு என்று இரண்டு திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காஜா மைதீன் 90 காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் யாரும் கேரவன் பயன்படுத்தாத நிலையில் 2000 ஆம் ஆண்டு தான் சினிமாவில் கேரவன் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது விஜயகாந்தை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற படப்பிடிப்புக்காக அதிக வாடகை கொண்ட கேரவன் ஒன்றை எடுத்து வந்து நிறுத்தியுள்ளார்.

விஜயகாந்த் படப்பிடிப்புக்கு வந்ததும் கேப்டன் நீங்கள் கேரவேனில் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்ல, கேரவனா அது எதற்கு என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். நீங்கள் மேக்கப் போடுவதற்கும் டிரஸ்ட் எடுப்பதற்கும் என்று தயாரிப்பாளர் கூற கேப்டன் உடனே தனது உதவியாளரை அழைத்து இன்னைக்கு சூட்டிங் இல்ல பேக்கப் பண்ணிடுங்க என்று உத்தரவிட்டுள்ளார். இதனைக் கேட்ட தயாரிப்பாளர் அதிர்ந்து போய் உள்ளார். உடனே கேப்டன் நான் இங்க வேலைக்கு வந்து இருக்கேனா இல்ல ரெஸ்ட் எடுக்க வந்திருக்கேனா, இந்த கேரவன் எங்கிருந்தால் இன்னைக்கு சூட்டிங் கிடையாது நான் இங்கே இருக்கணுமா இல்ல அது இங்கே இருக்கணுமான நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். விஜயகாந்தின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் உடனடியாக அந்த கேரவனை ஸ்டூடியோ விற்கு வெளியே நிறுத்தி உள்ளார். அதன் பிறகுதான் படப்பிடிப்பு நடந்துள்ளது.
