கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைரக்டராகவும் ராஜ்குமார் பெரியசாமி பணியாற்றியுள்ளார். அப்போது கமல்ஹாசன் உடன் கிடைத்த நட்புக்கு பரிசாக கிடைத்தது தான் அமரன் திரைப்பட வாய்ப்பு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இவர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள நிலையில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானது. இதில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த இராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்ததால் அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுவரைபடம் 300 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது. இது சிவகார்த்திகேயன் கேரியரில் மிக முக்கியமானது.

#image_title
இதனையடுத்து வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள். இதற்கு காரணமே விஜய் GOAT படத்தில் SK கையில் துப்பாக்கியை கொடுத்தது தான் என்றும் பலரும் கருது தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பேட்டியில் பேசிய சிவகார்த்திகேயன் GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதாவது, The Goat படத்தில் Thuppakki சீன் கேமியோ ரோலில் நடித்தது எதிர்பாராதது. படப்பிடிப்பின் நாள் வரை எனக்கு அந்தக் காட்சி தெரியாது. காட்சித் தாளில் “இத பாத்துக்கோங்க சுடக்கூடாது” என்று தான் இருந்தது. ஆனால் விஜய் சார் தான் “துப்பாக்கியை பாத்துக்கோங்க சிவான்னு” மாத்திட்டாரு என்று கூறியுள்ளார்.
