மீண்டும் ரெட் கார்டு வாங்க தயரான தனுஷ், சிம்பு, விஷால்.. குடுமிப்பிடி சிக்கலில் சிக்கி தவிக்கும் ராயன்..!

By Soundarya on கார்த்திகை 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் தனுஷ், சிம்பு மற்றும் விஷால் ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு வழங்க,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முன்னதாக முடிவு செய்யப்பட்டது. அதாவது என்னகாரணம் என்றால், நடிகர்  சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவடையாத தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது.

40 வயதில் புளியங்கொம்பை பிடித்திருக்கும் சிம்பு.. விரைவில் நடக்க உள்ள  திருமணம் - Cinemapettai

   

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது, நடிகர் சங்க பணத்தை முறையாக கையாளாதது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. மேலும் நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிப்ம்ஸ் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது.

   

விஷால் தயாரிக்கும் படங்களுக்கு தடை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tamil  cinema actor vishal case update

 

இந்நிலையில் இந்த ரெட் கார்டு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இவர்கள் மூன்று பேரும் நடிக்கும் படத்திற்கு எந்த ஒப்புதலும் கொடுக்கக்கூடாது என்று நேரடியாகவே பெப்சி நிறுவனத்திடம் சம்மந்தப்பட்டவர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாம்.

Dhanush in true story | உண்மை கதையில் தனுஷ்

இதனால நடிகர் தனுஷ் இட்லி கடை படத்திற்கு பின் மீண்டும் எந்த படத்திலும் நடிக்க முடியாதாம். அதேபோன்று நடிகர் சிம்பு தக் லைப் படத்திற்கு பின் எந்த புது படத்திலும் நடிக்க முடியாதாம். மேலும் நடிகர் விஷாலும் அதே போல் நடிக்க முடியாது என்று கூறப்படுகிறது.