இந்து மத வழிபாடுகளில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வழிபாடு இருக்கிறது. கடவுள்களுக்கு பல பொருட்களை வைத்து பூஜை செய்வர். ஒவ்வொரு பூஜைக்கு முக்கியமாக வைப்பது வெற்றிலை பாக்கு பழம் ஆகியவைதான். இந்த வெற்றிலை ஒவ்வொரு பூஜையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இந்த வெற்றிலையை வைத்து தீபம் ஏற்றினால் அதனால் என்ன பலன் கிடைக்கும் அதை எப்படி செய்வது என்பதை பற்றி இனி காண்போம்.

வெற்றியை தருவது வெற்றிலை என்று கூறுவார்கள். அந்த வெற்றியை தரக்கூடியவர் முருகப்பெருமான். அதனால் இந்த வெற்றிலை தீபம் முருகப்பெருமானுக்கு உரியதாக கூறப்படுகிறது. எப்போதுமே முருகப்பெருமானை வழிபடுவதற்கு சிறந்த தினம் என்று பார்த்தால் அது செவ்வாய்க்கிழமை நட்சத்திரம் கிருத்திகை திதி சஷ்டி ஆகும். முருகனை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
அதனால் முருக பெருமானுக்கு உரிய இந்த தினங்களில் வெற்றிலை தீபம் வைத்து வழிபாடு செய்யும்போது கவலைகள் தீரும் நிலப்பிரச்சனைகள் முக்கியமாக தீரும் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கு பூமிக்காராகன் என்ற பெயருண்டு. அதனால் செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டிக் வெற்றிலை தீபம் ஏற்றும் போது நிலம் வாங்குவது விற்பது போன்றவைகளில் உள்ள பிரச்சினைகள் இருந்தாலும் அது தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.
இது மட்டுமல்லாமல் புது வீடு வாங்க வேண்டும் என்று ஆசை இருப்பவர்களும் இந்த வெற்றிலை தீபத்தை ஏற்றி வழிபடலாம். முதலில் வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு முருகப்பெருமானின் திருவுருவப்படம் அல்லது விக்கிரகத்தை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.
அடுத்ததாக காம்புடன் கூடிய ஆறு வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலைகள் அழுக்காகவோ கிழிந்ததாகவோ இருக்க கூடாது. நல்ல வெற்றிலையாக பார்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை நுனியில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். இந்த ஆறு வெற்றிலையை தாம்பூல தட்டின் மீது விசிறி வடிவத்தில் பரப்பி வைக்க வேண்டும். பின்னர் ஒரு அகல் விளக்கினை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அந்த வெற்றிலையின் மீது நடுவே வைக்க வேண்டும். இந்த விளக்கில் நல்லெண்னைய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் புதிதாக ஆறு வெற்றிலையை எடுத்து நடுவில் வேல் வைத்து அதை சுற்றி வெற்றிலையை வைத்து ஆறு அகல் விளக்குகள் வைத்து ஏற்றுகின்றனர். அப்படியும் செய்யலாம். இது மட்டுமில்லாமல் அகல் விளக்கினுள் வெற்றிலையும் காம்பை எடுத்து போடலாம். இந்த விளக்கு எரியும்போது வெற்றிலை காம்பின் நிறுவனமும் விளக்கின் சூட்டால் வெற்றிலை சூடாகி அதன் நறுமணமும் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் இந்த வாசனையால் முருகப்பெருமான் மனமகிழ்ந்து நம் பிரச்சினைகள் தீர்வதோடு வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அருளாசி புரிவார் மற்றும் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.
