விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அர்ணவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக 6 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தது முதலே சற்று அமைதியக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சூடு பிடிக்கத் தொடங்கியது. வீட்டிற்குள் நுழைந்தது முதலே புதுப்புது டாஸ்க், முதல் ஓபன் நாமினேஷன் என வீடே ரெண்டுபட்டு கிடைக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இன்று நடக்கும் சண்டை குறித்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Instagram இல் இந்த இடுகையைக் காண்க
