வடிவேலுவையும் முரளியையும் ‘தொலச்சிபுடுவேன்’ என மிரட்டிய கேப்டன்… அப்படி என்ன தப்பு பண்ணாங்க?

By vinoth on கார்த்திகை 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.

   

ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். 2000 கள் வரை முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியதும் நடிப்பதை முற்றிலும் கைவிட்டார்.

   

#image_title

 

விஜயகாந்த் நடிகராக எவ்வளவு சாதனைகளைப் படைத்திருக்கிறாரோ அதுபோலவே நடிகர் சங்கத் தலைவராகவும் செயல்பட்டு சங்கத்தின் கடனை அடைத்து ஒரு முன்னுதாரண நடிகராக இருந்துள்ளார். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது பல பிரச்சனைகளை தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார்.

அப்படி ஒரு சம்பவத்தை சுந்தரா டிராவல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் பகிர்ந்துள்ளார். அதில் ” சுந்தரா டிராவல்ஸ் ஷூட்டிங்கின் போது முரளியும் வடிவேலுவும் தண்ணி போட்டுட்டு வந்து ஒழுங்கா நடிக்காம பயங்கர லூட்டி அடிச்சாங்க. நான் படத்தையே கைவிட்டுவிடலாம்னு நெனச்சேன். அப்ப நடிகர் சங்கத் தலைவரா இருந்த விஜய்காந்த் சார்கிட்ட சொன்னேன். அவர் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ‘தொலச்சுபுடுவேன்” இருவரையும் மிரட்டினார். அதுக்கப்புறம்தான் அவங்க ஒழுங்கா நடிச்சுக் கொடுத்தாங்க.” எனக் கூறியுள்ளார்.