வேலையை முடிச்சிட்டா ரிலாக்ஸா இருக்கலாம்ல… தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி… அப்படி என்ன பண்ணார் தெரியுமா?

By vinoth on கார்த்திகை 6, 2024

Spread the love

சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை  விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

   

அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது.

   

உலகளவில் எத்தனையோ திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலத்தால் அழியாத பல இசைத் தொகுப்புகள் மற்றும் பாடல்களை உருவாக்கியுள்ளார். ஆனால் இளையராஜா போல 8000 பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உலகளவில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வேகமாக மெட்டமைத்து பாடல்கள் உருவாக்குவதில் இளையராஜா வித்தகராக இருந்துள்ளார்.

 

#image_title

இதுபற்றி ஒரு ஆச்சர்யமான சம்பவத்தைப் பார்க்கலாம். தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த கேயார் முதல் முறையாக ஈரமான ரோஜாவே திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்துன் கொச்சினுக்கு சென்று கம்போஸிங் செய்யலாம் என அழைத்துச் சென்றுள்ளார்.

கொச்சினுக்கு சென்றதும் இளையராஜா ஒருநாள் ஓய்வெடுக்கட்டும், அடுத்த நாள் கம்போஸிங் வைத்துக் கொள்ளலாம் என நினைத்துள்ளார் கேயார். ஆனால் சென்ற முதல் நாளே 7 மணிக்கு கேயாரை அழைத்து பாடல்களுக்கான சூழல்களைக் கேட்டு 7 பாட்டுகளுக்கும் ஒரு மணிநேரத்தில் மெட்டமைத்துக் கொடுத்துவிட்டாராம். ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொண்டு அடுத்த பாடல் கம்போஸ் பண்ணிருக்கலாமே என கேயார் கேட்டதற்கு “வந்த வேலையை முடித்துவிட்டால் ரிலாக்ஸாக ஊர் சுற்றிப் பார்க்கலாம் இல்லையா” எனப் பதிலளித்தாராம் இளையராஜா.