வசூலில் கல்லா கட்டும் அமரன்.. 6 நாட்களில் மொத்த வசூல் இத்தனை கோடியா..?

By Nanthini on கார்த்திகை 6, 2024

Spread the love

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைரக்டராகவும் ராஜ்குமார் பெரியசாமி பணியாற்றியுள்ளார். அப்போது கமல்ஹாசன் உடன் கிடைத்த நட்புக்கு பரிசாக கிடைத்தது தான் அமரன் திரைப்பட வாய்ப்பு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

   

இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இவர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள நிலையில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானது. இதில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த இராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்ததால் அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது.

   

#image_title

 

இந்த திரைப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அமரன் திரைப்படத்தை பொதுமக்கள் தொடங்கி முதலமைச்சரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 42.3 கோடி வசூல் செய்திருந்ததாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த வசூல் சிவகார்த்திகேயன் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவை கடந்து வெளிநாட்டிலும் அமரன் திரைப்படம் நல்ல வசூலை குவித்துள்ளது.படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ. 6.6 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 83.25 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் பார்க்கும் போது படம் 6 நாட்களில் 102.07 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 150 கோடியைக் கடந்து 155 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. இதன் மூலம் வார நாட்களிலும் அமரன் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது தெரிய வருகிறது.