ஒவ்வொருவரும் தங்களுடைய எதிர்கால வாழ்வுக்காக திட்டமிட்டு சேமிக்கவும் அவசர தேவைகளுக்காக இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு சேமிக்க தொடங்கிவிட்டனர். அவர்களுக்காக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி போஸ்ட் ஆபீஸ் இல் உள்ள இன்சூரன்ஸ் பாலிசி திட்டம் மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. சேமிக்க விரும்புபவர்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம் ஒருவர் இல்லாவிட்டாலும் அவருக்கு பின்பாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் பண பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் ஏராளம் உள்ளது. சேமிப்பு திட்டங்கள் மட்டுமல்லாமல் தபால் நிலையங்கள் இன்சூரன்ஸ் பாலிசியையும் மக்களுக்கு வழங்கி வருகிறது. குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரக்கூடிய இன்சூரன்ஸ் பாலிசிகள் தபால் நிலைய காப்பீடு திட்டங்களில் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தபால் நிலைய போஸ்ட் ஆபீஸ் காப்பீடு திட்டங்களை எடுக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸில் 10 லட்சம் ரூபாய் பாலிசி தரும் திட்டம் ஆகும். இதற்கு நீங்கள் பிரீமியம் தொகையாக வெறும் 520 ரூபாய் செலுத்த வேண்டும். பிரீமியம் 755 ரூபாயிலிருந்து தொடங்கும் திட்டத்திற்கு காப்பீட்டுத் தொகை என்பது 15 லட்சம் ரூபாயாக இருக்கும். இன்சூரன்ஸ் பாலிசிகளில் முதலீட்டாளர்கள் உயிரிழந்தால் காப்பீட்டுத் தொகை அவருடைய குடும்பத்திற்கு கிடைக்கும். நிரந்தர ஊனம் ஏற்பட்டால் காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அதே சமயம் ஏதாவது விபத்தில் சிக்கினாலும் ஒரு லட்சம் ரூபாய் சிகிச்சைக்கும் இறுதி சடங்குக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையும் வழங்கப்படும். ஒருவேளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவராக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இந்த லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை 18 முதல் 66 வயது வரை உள்ள இந்திய குடிமகனாக யாராக இருந்தாலும் எடுக்கலாம். பாலிசி எடுக்க விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். தபால் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று நீங்கள் பாலிசியை பெற்றுக் கொள்ளலாம்.
