தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்தவர் தான் நடிகர் கோவை செந்தில். நாட்டாமை திரைப்படத்தில் விஜயகுமார் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு மீசையை நீதிவிட்டபடி உறுமிக் கொண்டு வெற்றிலை எச்சிலை துப்ப தயாரானதும் ஒரு குடுவையை ஏந்தியபடி அதை பிடிக்க சரியாக ஒரு நொடி மட்டும் திரையில் வந்து போகிற அந்த முகத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் இப்படி ஒரு சில நொடிகள் அல்லது நிமிடங்களே வந்து போய் உள்ளார். கோவை அருகே உள்ள பள்ளிபாளையம் தான் இவருடைய சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போதே நாடகங்களில் நடிக்க தொடங்க அங்குள்ள ஒரு நாடக கம்பெனியில் வைத்தேன் நடிகர் பாக்கியராஜ் சந்தித்தார்.
![]()
குமாரசாமி என்ற இவரது பெயரை கோவை செந்தில் என மாற்றியது பாக்கியராஜ் தான். கவுண்டமணியுடன் சேர்ந்து நடிகர் செந்தில் பிரபலமாக தொடங்கி இருந்ததால் பெயர் குழப்பத்தை தவிர்க்கவே கோவை என்ற அடைமொழி வந்தது. நாடக நடிப்பு அப்படியே சினிமா ஆசையை தூண்டிய நிலையில் அவர் பார்த்துக் கொண்டிருந்த வங்கிப் பணியை உதறித் தள்ளிவிட்டு கோவை செந்தில் சென்னைக்கு வந்தார். வங்கியில் காசாளராக பணியாற்றிய கோவை செந்தில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் அந்த பணியை உதறிவிட்டு சென்னைக்கு வந்த நிலையில் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் வாய்ப்பு தந்து பாக்கியராஜ் அடையாளம் காட்டினார். பெரும்பாலும் பூசாரி மற்றும் பிச்சைக்காரர் வேடங்களில் கோவை செந்தில் நடித்திருந்தார்.

இது நம்ம ஆளு, பவுனு பவுனுதான், அவசர போலீஸ் 100 போன்றவை கோவை செந்தில் நடித்த திரைப்படங்கள் ஆகும். தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். பார்த்திபனின் புதிய பாதை, விக்ரமனின் வானத்தைப்போல ஆகிய திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். கடைசியாக இப்போதைய இளம் நடிகர்கள் சிலரும் இவரை தங்களது படங்களில் நடிக்க வைத்தனர். மொத்தமாக சுமார் 400 திரைப்படங்கள் வரை நடித்திருக்கும் செந்தில் ஆரம்பத்திலேயே சென்னையில் தனியாளாக வசித்து வந்தார்.
![Kovai Senthil [Comedy and Character Actor] | Antru Kanda Mugam](https://antrukandamugam.wordpress.com/wp-content/uploads/2018/04/kovai-senthil.jpg)
வாடகைக்கு ரூம் எடுத்து சில ஆண்டுகள் தங்கி இருந்த இவர் படபிடிப்பிற்கு செல்லும்போது கூட பேருந்தில் தான் சென்று வருவார். அந்த அளவிற்கு சிரமப்பட்டு தான் சினிமாவில் இவர் முன்னேறினார். இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த கோவை செந்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் மறைந்தாலும் இவருடைய காமெடிகளுக்கு இன்றும் ரசிகர்கள் ஏராளமானோர் அடிமை.
