“பூ” படத்திற்காக வாங்கிய செக்கை திருப்பி கொடுத்த நடிகை பார்வதி…. காரணம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க….!

By Soundarya on கார்த்திகை 4, 2024

Spread the love

தமிழில் 2008ஆம் ஆண்டு பார்வதி, ஸ்ரீகாந்த், இன்பநிலா ஆகியோர் நடிப்பில், சசி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’பூ’. ச.தமிழ்செல்வனின் ’வெயிலோடு போய்’ எனும் சிறுகதையினைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தமிழில் வெளிவந்த தனித்துவமான காதல் கதைகளில் ஒன்றாகும்.

#image_title

கோலிவுட்டில் ஆண்களுடைய கண்ணோட்டத்தில் அதிகம் பதிவு செய்யப்பட்ட காதல் கதைகளுக்கு மத்தியில் தான் ஒரு பூ மலரும் அழகோடு மாரியின் கண்ணோட்டத்தில் காதலைப் பதிவு செய்த இந்த படமும், மாரியாக வாழ்ந்த பார்வதியும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு கேரக்டராக உள்ளது. தமிழ் சினிமா கண்ட சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக  உள்ளது இந்த திரைப்படம். தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்பட பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

   
   

#image_title

 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இந்த படத்தின் இயக்குனர் சசி , படத்திற்கு கூடுதல் கால்ஷீட்டுக்காக பார்வதிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் தந்தேன். வாங்கிக்கொண்டு போனவர் திரும்பி வந்தார். அறைக்கு போய் கண்ணாடியில் பார்த்தேன்.

#image_title

மாரியாக வாழ்வதற்கு ஒரு தொகை கேட்டாய். இப்போது கூடுதல் பணம் கொடுத்தால் தான் மாரியாக வாழ்வேன் என்கிறாயே நீயெல்லாம் என்ன நடிகை என்று கேட்கிறாங்க சார் என்று கூறிவிட்டு செக்கை திருப்பி கொடுத்துவிட்டார்.