தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அவர் பல்வேறு இடங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டும் வருகிறார். தற்போது பைக் ரேஸில் களமிறங்கவுள்ளார்.

#image_title
அதற்கான அணியையும் தொடங்கியுள்ளார். துபாயில் நடந்த கார் ரேஸிலும் பங்கேற்றார். தமிழ்நாடு அரசாங்கத்தின் எஸ்.டி.ஏ.டி லோகோவை தனது கார் மற்றும் பந்தய உபகரணங்களில் பதித்துள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

#image_title
நம்முடைய (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

#image_title
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் – பார்முலா4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்.
