சாதாரண குடும்பத்தில் இருந்து டிக் டாக் செய்து திரை உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார் கேப்ரியல்லா செல்லஸ். ஆனால் இப்பொழுது இவர் தமிழில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தரி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் கேப்ரியல்லா. அதன் பிறகு டிக் டாக்கில் பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் இம்ப்ரஸ் செய்தர் .

#image_title
இதன் பலனாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நயன்தாராவுடன் ஐரா என்ற படத்தில் நடித்தார். பின்னர் கபாலி, காஞ்சனா 3 போன்ற தமிழ் படங்களில் நடித்து சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தாலும் அனைத்துமே சின்ன கதாபாத்திரமாக இருந்ததால் வெள்ளித்திரை பக்கம் ஒதுங்கினார்.

#image_title
இதனால் சன் டிவியில் சாக்லேட், சுந்தரி போன்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சுந்தரி சீரியலின் இரண்டாவது சீசன் தொடங்கி அதுவும் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் கேப்ரியல்லா தன்னுடைய காதல் கணவரை விவகாரத்தை செய்ய இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. கேப்ரியல்லா சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .குறும்படங்களில் நடித்த பொழுது அதில் கேமரா மேனாக பணிபுரிந்த சுருளியோடு நெருங்கி பழகி வந்தார்.

#image_title
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கேப்ரில்லாவிற்கு பக்கபலமாக இருந்தவர்தான் சுருளி. இதனிடைய கேபிரியல்லாவுக்கும் சுருளிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் இதற்கான முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய கணவர் சுருளியுடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கேப்ரியல்லா.
