தமிழ்நாட்டின் சிறந்த தலைவராக சிறப்பான ஆட்சி நடத்தியவர் MGR. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் MGR. மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்தவர் MGR. சினிமாவிலும் சரி அரசியலும் சரி தனக்கான தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் MGR.

குடும்ப வறுமைக்காக நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து அதற்கு பிறகு நடிகராக உயர்ந்தவர். நடிகராக தனக்கு வாய்ப்பு கிடைத்த பிறகு அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட MGR அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதனால் இவரை மக்கள் வெகுவாக ரசித்தனர்.
MGR படங்கள் என்றாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார். தனக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு பணி செய்ய விரும்பிய MGR நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி செய்தார். தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர் MGR.
எம்ஜிஆர் நடிகராக இருக்கும் போதும் சரி, முதலமைச்சராக இருக்கும் சரி எண்ணிலடங்கா நபர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். வாரி வழங்கும் வள்ளல் எம்ஜிஆர் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அது என்னவென்றால் MGR ஒருமுறை காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ரயில்வே கேட் அருகே ரயில் செல்வதற்காக வண்டி நிறுத்தப்பட்டது. அப்போது கொஞ்சம் பக்கத்தில் யாரோ அழுகுரல் கேட்டிருக்கிறது. உடனே எம்ஜிஆர் தனது உதவியாளரை சென்று என்னன்னு பார்க்கும்படி கூறியிருக்கிறார். அதை பார்த்து வந்த உதவியாளர் அங்கு ஒரு குதிரை வண்டிக்காரர் இருக்கிறார். அவரது குதிரை இறந்து விட்டது. பிழைப்பு போய்விட்டது அதைவிட குதிரையை அடக்கம் செய்வதற்கு கூட பணம் இல்லையே என்று அழுதுட்டு இருக்கிறார் என்று கூறுகிறார் உதவியாளர்.

உடனே அந்த உதவியாளரிடம் புதிய குதிரையும் இறந்த குதிரையும் அடக்கம் செய்வதற்கும் எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று கேட்டார் MGR அறநூறு ரூபாய் ஆகும் என்று கூறி இருக்கிறார் உதவியாளர். உடனே யோசிக்காமல் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து அந்த குதிரைக்காரரிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறார் எம்ஜிஆர். அதன்படி செய்தார் உதவியாளர். பின்னால் சிறிது நாள் கழித்து அந்த குதிரைக்காரர் எம்ஜிஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து தனது கண்ணீராலே அபிஷேகம் செய்து கதறி அழுது இருக்கிறார். இதன் மூலம் குறிப்பறிந்து உதவி செய்பவர் எம்ஜிஆர் என்பது நமக்கு தெரிகிறது.
