விஜயின் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரபல நடிகரின் மனைவி.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

By Nanthini on ஐப்பசி 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் இறுதியாக GOAT திரைப்படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் விக்கிரவாண்டி நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர்.

Vijay Party Conference tomorrow: Preparations are in full swing | நாளை விஜய்  கட்சி மாநாடு : ஏற்பாடுகள் தீவிரம்

   

இதனால் விக்கிரவாண்டியில் ஹோட்டல் அறைகள் முழுவதும் நிரம்பி வழிவதால் வீடுகளில் வாடகைக்கு எடுத்து தொண்டர்கள் தங்கி உள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி சாலைப் பகுதியில் நாளை நடைபெற உள்ளது.

   

விஜய் மாநாட்டை முன்னிட்டு தல ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்.. ரசிகர்கள்  ஷாக்

 

அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியின் பொதுச் செயலாளரான பிஸ்ஸி ஆனந்த் விஜயின் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு வருகின்றார். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. நாளை மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் 100 அடி கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார். இதனைத் தொடர்ந்து விஜயின் மாநாட்டுக்கு நடிகர் நடிகைகள் உட்பட தொண்டர்கள் பலரும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டில் அஜித்தின் மனைவி ஷாலினி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் மாநாடு மேடையில் ஒளிபரப்பு செய்யப்படும் ஏவி ஒன்றில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்ல உள்ள நிலையில் தல தோனியும் விஜய்க்கு வாழ்த்து சொல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய்யின் மாநாடு தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.