முருகன் என்றாலே நாம் நினைவுக்கு வருவது தமிழ் கடவுள் அழகன் மற்றும் அறுபடை வீடுகள். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை இவைதான். இந்த அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்பம் ஏற்படும். ஆனால் இந்த அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்த பலன் ஒரே ஸ்தலத்தில் ஒரே கோவிலில் கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை பற்றி தான் இனி காண்போம்.

முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடாக சொல்லப்படுவது தான் திருச்செந்தூர் முருகன் கோவில். போருக்கு செல்லும் வீரர்கள் அங்காங்கே தங்கி ஓய்வெடுக்கும் இடத்தை படைவீடு என்பார்கள். அதேபோல் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்வதற்காக படைவீடு அமைத்து இருந்ததற்காக தான் திருச்செந்தூருக்கு தனி சிறப்பு இருக்கிறது.
முருகப்பெருமான் ஒவ்வொரு இடத்திற்கும் விரும்பி செஞ்சு இருந்த இடத்தை தான் அவர்கள் அறுபடை வீடாக கூறுகிறார்கள். ஒவ்வொரு படைவீட்டும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படைவீடுகள் எல்லாம் சென்று தரிசிக்க முடியாதவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வந்து முருகனை தரிசித்தால் மற்ற ஐந்து படை வீடுகளுக்கும் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

குழந்தை பாக்கியம், திருமண வரம், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள், குடும்ப ஒற்றுமை, தொழில் முன்னேற்றம் ஆகியவை வேண்டுபவர்கள் முருகனின் மற்ற எல்லா அறுபடை வீடுகளுக்கும் என்னால் செல்ல இயலவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் திருச்செந்தூருக்கு வந்து முருகப்பெருமானை மனதார வேண்டி விட்டு சென்றால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் நீங்கள் படை வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும்பொழுது முதலில் திருச்செந்தூரை தேர்ந்தெடுத்து ஆன்மீக பயணம் செல்லலாம்.
