black chicken

நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் தரும் இறைச்சி… கடக்நாத் கருங்கோழியின் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா…?

By admin on ஐப்பசி 26, 2024

Spread the love

பல பேருக்கு சைவ சாப்பாட்டை விட அசைவ சாப்பாடு மிகவும் பிடிக்கும். அசைவத்தில் அதிகப்படியான புரதச்சத்து இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் கெடுதலான ஒரு இறைச்சி என்று சொல்லப்படுவது பிராய்லர் எனப்படும் வெள்ளை கோழிகள் தான். இதாற்கு மாற்றாக நாட்டுக்கோழி சாப்பிடுவது மிகவும் நல்லதாக மருத்துவர்கள் கூறுவார்கள். அதற்கும் மேலாக தற்போது சமீப காலமாக மிகவும் பிரபலமாக இருப்பதுதான் கடக்நாத் கருங்கோழி ஆகும்.

நாட்டுக்கோழி இனங்களில் ஒன்றான இந்த கடக்நாத் கருங்கோழி இறைச்சியில் அதிக அளவு புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இந்த கருங்கோழிகள் மத்திய பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது பண்ணைகளில் இந்த கடக்நாத் கருங்கோழி வளர்க்கின்றனர். அதற்கான டிமென்ட் அதிகமாகவே இருக்கிறது. கடக்நாத் கருங்கோழியில் அடர் கருப்பு பென்சில் கருப்பு மயில் கருப்பு என்ற மூன்று ரகங்கள் இருக்கின்றன. இவற்றில் இறக்கை முதல் இறைச்சி வரை அனைத்துமே கருப்பு நிறத்தில் இருக்கும்.

   

   

இந்த இறைச்சியின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் இந்த கடக்நாத் கருங்குழியை வைத்து செய்யப்படும் மருந்துகள் பலவித நோய்களுக்கு பயன்படுகிறது. இந்த கடக்நாத் கருங்கோழி வெறும் 0.73 என்ற அளவிலேயே கொழுப்பு இருக்கிறது. இது கொழுப்பு இல்லாத இறைச்சி ஆகும்.

 

மேலும் இந்த கடக்நாத் கருங்கோழியில் அமினோ அமிலங்கள் தசைநார் வளர்ச்சிக்கு உதவுகிறது. ரத்தக்குழாய் நீர்ச்சியை தடுக்கிறது. இது தவிர வைட்டமின் பி1, பி2, பி 6, பி 12, வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளிட்டவை இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் ஏ ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதயத்துக்கு பாதுகாப்பு அளித்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

இந்த கடக்நாத் கருங்கோழியில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சோகை நோய்க்கு அருமருந்தாக இருக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ் உட்பட்ட 20க்கும் மேற்பட்ட நுண்ணிய சத்துக்கள் இந்த இறைச்சியில் இருக்கிறது. அதனால் இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கடக்நாத் கருங்கோழியை வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால் யோசனை இன்றி வாங்கி சாப்பிடுங்கள்.