42 வயசுலயும் குறையாத கிளாமர்.. சேலையில் கவர்ச்சிபொங்க போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா..!

By Nanthini on ஐப்பசி 26, 2024

Spread the love

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீசான சந்தோசம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

   

அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு ஜெயம் ரவியுடன் மழை, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், விஜய்யின் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் ஸ்ரேயா நடித்துள்ளார்.

   

 

கடந்த 2007-ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் ஸ்ரேயாவுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து கந்தசாமி, குட்டி, சிக்கு புக்கு உள்ளிட்ட படங்களிலும் ஸ்ரேயா சரண் ஹீரோயினாக நடித்தார்.

ஸ்ரேயா சரணுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் ஸ்ரேயா பிட்டாக இருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் ஸ்ரேயா சரண் சேலையில்  கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயா இது? 42 வயதிலும் ஸ்ரேயா சிக்குனு இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.