rama ekadeshi

வருகிறது ராம ஏகாதசி… எப்போது மற்றும் எப்படி விரதமிருந்து பூஜை செய்வது…?

By admin on ஐப்பசி 24, 2024

Spread the love

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விருப்பங்கள் இருக்கும். அதை கடவுளிடம் சொல்வார்கள். தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒரு சில கோவிலில் பொங்கல் வைப்பது பரிகாரம் செய்வது வேண்டுதல் செய்வது போன்றவற்றை செய்வர். ஒரு சிலர் விரதம் இருந்து கடவுளை மனதார வேண்டுவர். அப்படி விரதம் இருந்து வேண்டும் பொழுது நம்முடைய பிரார்த்தனைக்கு உடனடியே கடவுள் செவி சாய்ப்பார் என்பது ஐதீகம். அது போல இந்து மதத்தில் சதுர்த்தி விரதம் சஷ்டி விரதம் ஏகாதசி விரதம் என பல இருக்கிறது. இவற்றுள் முதன்மையானது தான் ஏகாதசி விரதம்.

   

இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கும் போது ஒருவர் செய்த பாவம் நீங்கி புண்ணியங்கள் அதிகரிக்கும். அதிகப்படியான பலன் தரக்கூடியது தான் இந்த ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் என்பது பெருமாளை மனதார நினைத்து கடைபிடிக்கும் விரதம் ஆகும். ஒரு வருடத்திலும் 24 ஏகாதசிகள் நிகழும். அதில் ஒரு சில ஏகாதசி விரதங்கள் மிக முக்கியமானதாக சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

   

இவற்றில் அதிக புண்ணியங்களை தரக்கூடிய ஏகாதசி எதுவென்றால் புரட்டாசி ஐப்பசி மற்றும் மார்கழி மாதங்களில் வரும் ஏகாதசி ஆகும். ஐப்பசி மாத தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசிக்கு ராம ஏகாதசி என்று பெயர். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நமக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

இந்த வருடம் ராம காதசி ஆனது அக்டோபர் 27ஆம் தேதி காலை 8 55 மணிக்கு துவங்கி அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 27 வரை ஏகாதசி திதி நடக்கிறது. சூரிய உதயமாகும் போது ஏகாதசி நடப்பதால் அக்டோபர் 28ஆம் தேதியே ஏகாதசியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ராம காதசியில் பூஜை செய்வதற்கு வழிபடுவதற்கான நேரமாக காலை ஆறு முப்பது மணி சூரிய உதய நேரம் தான் உகந்த நேரம் ஆகும்.

ராம ஏகாதசியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடும்போது நம் பஞ்சமா பாதகங்கள் என சொல்லப்படும் மிகப்பெரிய பாவங்கள் அனைத்தும் தீரும். மற்ற எல்லா விரதங்களிலும் இருக்கும் கிடைக்கும் பலன்களை விட இந்த ராம காதசி விரதம் கடைபிடித்து பெருமாளை மனதார வணங்கும் பொழுது அதீத பன்களையும் நாம் நினைத்த காரியம் தடைப்பட்டு கொண்டு இருந்தால் அது உடனே நடக்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.