இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்தது சில தான். ஆனால் தெரியாதவை நிறைய இருக்கின்றது. அதில் ஒன்றுதான் துக்ளாகாபாத் கோட்டை. இது டெல்லியில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டை ஆகும். இந்த கோட்டை எப்படி உருவானது இதை ஏன் சபிக்கப்பட்ட கோட்டை என்று கூறுகிறார்கள் என்பதை பற்றி இனி காண்போம்.

1321 ஆம் ஆண்டு இந்தியாவின் டெல்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் நிறுவனர் கியாஸ் உத்தின் துக்ளக் என்பவர் நான்காவது வரலாற்று நகரமான டெல்லியை நிறுவிய போது இந்த கோட்டையை கட்டினார். ஆனால் சிறிது காலத்திலேயே இக்கோட்டை கைவிடப்பட்டது. துக்ளக் வம்சத்தை தொடங்கியவரும் இந்த கியாஸ் உத்தின் துக்ளக் என்ற மன்னர்தான் இந்த கோட்டையை அவர் தனது கற்பனையில் வைத்திருந்து அதை நிஜத்தில் கொண்டுவர வேண்டும் என்று மெனக்கெட்டு மங்கோலிய கொள்ளையர்களை தவிர்ப்பதற்கு ஒரு அசைக்க முடியாத அழகான கோட்டையை கட்ட வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் அவர் விரும்பப்படி முழுவதுமாக இதை நிறைவேற்ற முடியவில்லை.
கியாஸ் உத்தின் துக்ளக் தனது கனவு கோட்டை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் டெல்லியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் தனது கோட்டையில் வேலை செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இதனால் அங்கிருந்த சூபி என்ற மாயக்காரர் கோபப்பட்டு மன்னருடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் அந்த புனித சூபி சாபம் அளித்ததாகவும் அது இன்று வரை அந்த கோட்டையில் எதிரொலிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த கியாஸ் உத்தின் துக்ளக் மன்னர் விருப்பத்தில் கட்டப்பட்டதால் அவர் இறந்த பிறகு அவரை இந்த இடத்திலேயே அடக்கம் செய்தனர். இவரின் கல்லறை அந்த கோட்டையின் தெற்கு புறக்காவல் வழியில் செல்லும்போது நம்மால் பார்க்க முடியும். இதன் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை மிகவும் பிரமிக்க வைக்கும் வகையில் தான் இருக்கும். இந்த கோட்டை அருகே யமுனா நதி செல்வாதால் அதனின் நீர் இதற்குள் நுழைந்து போவது போல் ஒரு அமைப்பு ஏற்படுத்தி இருப்பார்கள். அப்போதுதான் நீர்மட்டம் உயரும்போது அபாய நேரத்தில் கண்டுகொள்ள இயலும் என்ற வசதிக்காக ஏற்படுத்தியிருந்தார்கள்.

படிக்கட்டுகள், ஒரு பெரிய ஹால், மசூதி போன்ற பகுதிகள் இந்த கோட்டையில் பாதிப்பால் அடைந்த நிலையில் இருக்கிறது. இந்த துக்ளகாபாத் கோட்டையில் இது துக்ளக் ஆட்சி கால கட்டிடக்கலை எவ்வளவு நாகரிகமாக இருந்தது என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. இப்படியே பல இடத்தில் யாரும் அறிந்திடாத மன்னர்களால் உருவாக்கப்பட்ட இடங்கள் இந்தியாவில் பெரும் அளவில் இருக்கின்றன. இதையெல்லாம் நாம் பார்க்கும் போது மன்னர்கள் அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை கண்கூடாக நம்மால் உணர முடியும். இந்த மாதிரி இடங்களை எல்லாம் தவறாமல் நம் வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.
