ஹிந்தி பிக்பாஸுக்கே தமிழ் சொல்லிக் கொடுத்து.. ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ருதிகா.. வைரல் வீடியோ..!

By Nanthini on ஐப்பசி 23, 2024

Spread the love

தமிழில் ஸ்ரீ படத்தில் சூர்யாவின் ஜோடியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ருதிஹா. தொடர்ந்து தித்திக்குதே மற்றும் ஆல்பம் என அடுத்தடுத்த நான்கு படங்களை நடித்த இவர் அத்தோடு மூட்டையை கட்டிக் கொண்டு வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். பிறகு அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பிசினஸில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இவருக்கு சினிமா சரியாக கை கொடுக்கவில்லை என்ற நிலையிலும் தொலைக்காட்சி அள்ளி அணைத்துக் கொண்டது.

   

அந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த அவர் தற்போது பிக் பாஸ் ஹிந்தி 18 நிகழ்ச்சியிலும் இணைந்து அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சல்மான் கானின் ஹோஸ்டிங்கில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் பிக் பாஸ் ஹிந்தி பதினெட்டு நிகழ்ச்சியில் ஸ்ருதிஹா அர்ஜுன் பங்கேற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற முதல் தென்னிந்திய பிரபலம் என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அவர் இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் இடம்பெற்று இருந்தார்.

   

 

ஆனால் அதிலிருந்து தப்பித்து விட்டார். நிலையில் ஸ்ருதிஹாவின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது அதிக அளவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா பிக்பாஸ்க்கு தமிழ் கற்று தருகிறார். அப்போது,  “ஹே“ என்று கரடுமுரடான குரலில் சொல்கிறார். அதேபோல் ஹிந்தி பிக்பாஸ் தனது வழக்கமான குரலுக்கு மாறாக “ஹே“ என்று ஹார்ஷான குரலில் சொல்கிறார். பின்னர் ஸ்ருதிகா “நீ எங்கயுமே” என்று சொன்னவுடன் பிக்பாஸ் “எங்க்யுமே” என்று திருப்பி சொல்கிறார்.

ஸ்ருதிகா “சென்னையை விட்டு வெளிய போகவே முடியாது” என்று சொல்கிறார். அதையும் பிக்பாஸ் அதே மாட்யுலேஷனில் “போகவே முடியாது” என்று தமிழ் கற்றுக்கொண்டதுபோல உற்சாகமாக பேசுகிறார். ஸ்ருதிகா You ar very Funny biggboss என்று அவரும் உற்சாகமாக சொல்கிறார். ஹிந்தி பிக்பாஸ் தமிழ் போட்டியாளரிடம் தமிழ் கற்றுக்கொள்கிறார். அந்த வீடியோ ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shrutika Arjun Raaj இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shrutika_arjun)