சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், ரோகிணி தங்களது திருமண நாளில் மீனாவும் ஸ்ருதியும் பெரிய பணக்கார வீட்டு பொண்ணுங்க போல இருக்கணும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். முத்து 50 காருக்கு ஓனர், ரவி சொந்தமா ரெஸ்டாரன்ட் வச்சிருக்காங்க என்று நாங்க பொய் சொல்லி இருக்கோம் அதுக்கு தகுந்த மாதிரி தான் நீங்களும் நடிக்கணும் என்று இருவரிடமும் ரோகிணி கூற அதற்கு மீனா இந்த பொயெல்லாம் என்னால சொல்ல முடியாது உங்க பிசினஸ்க்காக ஏன் இப்படி பொய் சொல்றீங்க உண்மையை சொல்லி நடக்கலாம் இல்லை என்று அறிவுரை கூறுகிறார். ஸ்ருதி தனது கணவர் பற்றி நீங்கள் எப்படி எப்படி சொல்லலாம் என்று அவரும் ரோகினி இடம் சண்டை போடுகிறார். பிறகு முத்துவும் ரவியும் இதற்கு ஒத்துக்கிட்டாங்க அப்படின்னு ரோகினி கூற இறுதியாக மீனாவும் ஸ்ருதியும் இந்த நாடகத்திற்கு ஒப்புக் கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் இரவு நேரத்தில் மனோஜ் மற்றும் ரோகினி விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அவங்க திருட்டுத்தனம் பண்றது மட்டுமல்லாமல் நம்பளையும் அதுல சேர்த்துவிட பார்க்கிறார்கள் என்று முத்து மீனாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு அனைவரும் நிகழ்ச்சிக்கு ரெடியாகி கொண்டிருக்கும் சமயத்தில் விஜயா ஆளை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி வித்தியாசமான லுக்கில் வருகிறார். அவரைப் பார்த்து கணவரும் அழகில் மயங்கி அவரை வர்ணிக்கிறார். நான் உன்ன கல்யாணம் பண்ணும் போது கூட நீ அவ்வளவு அழகா இல்ல இப்போ ஹீரோயினி மாதிரி இருக்க என்று கூறி அவரும் வர்ணிக்கிறார். அந்த சமயத்தில் ரவியும் ஸ்ருதியும் அங்கு வர இருவரையும் விஜயா சூப்பரா இருக்கீங்க என்று கூறுகிறார்.

பிறகு ரோகிணியும் வித்தியாவும் சேர்ந்து இன்னைக்கு எப்படியாவது முத்துவின் போனை எடுத்து விட வேண்டும் என்ற பிளான் போடுகின்றனர். தொடர்ந்து மனோஜூம் ரோகிணியும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளே வர அனைவரும் கைத்தட்டி அவர்களை வரவேற்கின்றனர். அந்த சமயத்தில் விஜயா என் பிள்ளைங்க ரெண்டு பேரும் எப்படி பணக்கார வீட்டு பிள்ளைங்க மாதிரி ஜொலிக்கிறாங்கன்னு பாரு முத்துவும் மீனாவும் பயந்து ஓடி இருப்பாங்க என்று கலாய்க்கிறார். அந்த சமயத்தில் அனைவருக்குமே டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான லுக்கில் மீனாவும் முத்துவும் உள்ளே வந்து கலக்குகின்றனர்.

அனைவரும் அவர்களைப் பார்த்து வியக்கின்றனர். பிறகு முத்துவும் மீனாவும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வித்யா உள்ளே நுழைந்து முத்துவிடமிருந்து போனை வாங்கும்போது மனோஜ் திடீரென வந்து போனை தட்டி விடுகிறார். அவசரமா குறுக்க வந்ததுனால ஃபோன் கீழே விழுந்துடுது. உடனே முத்து போனை வாங்கி மனோஜை திட்டிவிட்டு நாங்களே போட்டோ எடுத்துக்கிறோம் நீ கிளம்பு என்று வித்யாவிடம் கூறுகிறார். கடைசியா பண்ண பிளானும் சொதப்பியதால் டென்ஷனில் ரோகிணி இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
