தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக சொல்லிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். தற்போது இவருடைய நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அஜித் பற்றி பல வருடம் கழித்து சுந்தர் சி எமோஷனலாக பகிர்ந்து உள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உன்னை தேடி. ரசிகர்கள் இன்றும் கொண்டாடும் காதல் திரைப்படமாக இந்த திரைப்படம் உள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நாம் சாதாரணமாக செய்யும் விஷயத்தை அஜித்தால் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார்.

அது குறித்து சுந்தர்.சி கூறுகையில், உன்னை தேடி படத்தின் பாடலை ஷூட் செய்வதற்காக நியூஸிலாந்துக்கு விமானத்தில் சென்று இருந்த போது அஜித் என்கிட்ட சொன்னாரு, ஜி உடனே எனக்கு ஒரு ஆபரேஷன் செய்யணும், அந்த டாக்டர் வெளிநாட்டில் செட்டிலாக போகிறார் அவர் போவதற்கு முன்பு அவர் டேட் கொடுத்திருக்கிறார். என்னுடைய படப்பிடிப்பை ஏழு நாட்களில் நீங்க முடித்துக் கொடுத்தால் நான் உடனே இந்தியாவுக்கு போய் ஆபரேஷன் செய்து கொள்வேன் என கூறினார். இந்த ஆப்ரேஷன் சக்சஸ் ஆகலை என்றால் இனி வாழ்க்கை முழுக்க நான் படுத்த படுக்கையா தான் இருக்கணும், அதனால் அதற்குள் நீங்க படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று அஜித் என்னிடம் கூறினார்.

அந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடிய போது கூட அவரால் நிற்கவே முடியவில்லை. அவர் அநியாயத்திற்கு உழைத்தார். அப்பா அஜித் ரொம்பவும் கஷ்டத்தில் இருந்தார். இப்போ நான் சொன்னா ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நாம் நடந்தால் அந்த சென்ஸ் மூளைக்கு போயி அடுத்த அடி வைப்போம். அது தானா நடக்கும் விஷயம். ஆனால் அஜித் தரையை தான் பாக்கணும். கால் தரையில் பட்டா அது மூளைக்கு தெரிய வராது.

பிரச்சனையால் அப்படி. அவ்வளவு கஷ்டப்பட்டார். அது மட்டுமல்லாமல் அவ்வளவு குளிர்ல ஐஸ் கட்டி மேல அசராமல் நடந்து வந்தாரு. நான் போயி என்னதான் நீங்க ஹீரோவா இருந்தாலும் இதுல கூட வாய் இப்படி பண்ணுவீங்க என்று கேட்டதற்கு, ஜி எனக்கு தான் உணர்ச்சியே இல்லையே அப்புறம் எப்படி இதை என்னால புரிஞ்சுக்க முடியும் என்று அவர் சொன்னது எனக்கு கண் கலங்கிடுச்சு. வாழ்க்கையில் அந்த அளவுக்கு கஷ்டப்பட்ட மனுஷன் தான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்காரு என்று அஜித் பற்றி எமோஷனலாக சுந்தர் சி பேசியுள்ளார்.
