தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் கருணாஸ். 2001 ஆம் ஆண்டு சூர்யா நடித்த நந்தா திரைப்படம் மூலம் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலேயே காமெடியால் மக்களை ஈர்த்த கருணாஸ் நடிப்பில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார். அதன்படி வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், பாபா மற்றும் பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கருணாஸ் கலக்கி இருப்பார்.

குறிப்பாக திருடா திருடி மற்றும் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் இவர் பேசிய காமெடி டயலாக் என்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இப்படி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்தப் படங்களும் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று தந்தன. அதன் பிறகு பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு அரசியலில் கருணாஸ் களமிறங்கினார். நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ்.

அவரும் ஒரு பிரபல நட்சத்திரம் மற்றும் நாட்டுப்புற குத்து பாடல்களுக்கு தயார் போனவர் தான். சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல்கள் இவரையும் மக்களுக்கு அடையாளம் காட்டிய பாடல்களாகும். அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். வருமான உடல் மற்றும் பாய் கட் இதுதான் அவருடைய அடையாளம். நீண்ட காலமாகவே அவர் அப்படித்தான் இருக்கிறார். கருணாஸ் மற்றும் கிரேஸ் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர். பாடல்கள் பாடுவதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் சமீபத்தில் தான் அவருடைய மகள் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் கருணாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிதாமகனில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தை நான்தான் பண்ணி இருந்திருக்கணும். அப்படி நான் மட்டும் நடிச்சிருந்தனா நான் தான் தமிழ்நாட்டோட நானா பட்டேகர். நான்தான் தமிழ்நாட்டின் கலாப மணி. நான் தான் தமிழ்நாட்டின் சீனிவாசன். நான் அதை மிஸ் பண்ணிட்டேன். ஏனென்றால் எனக்கு சினிமா தெரியவில்லை. ஏதோ நடிக்க கூப்பிட்டாங்க நாமளும் போய் நடிப்போம் என்று நடித்து விட்டேன். நாம ஏதாவது ஒரு படத்துல நடிக்க முடியலன்னு டைரக்டர் கிட்ட சொல்லிட்டா அத ஒரு பகை மாதிரி மனசுல வச்சு நம்மகிட்ட பல வருஷம் கழிச்சு கூட சொல்லிக் காட்டுவாங்க. சினிமா என்பது முழுக்க முழுக்க ஒரு போலியான உலகம். அத புரிஞ்சுகிட்டு நாம்ப தான் நகர்ந்துக்கிட்டே போகணும் என்று கருணாஸ் பேசி உள்ளார்.
