வீட்டில் உள்ள பெண்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் மிகவும் உதவிகரமாக இருப்பது வீட்டு உபயோக பொருட்கள். குளிர்சாதன பெட்டிகள், டிஷ்வாஷர்கள், ரேடியோக்கள், தொலைக்காட்சிகள் என பலவிதமான வீட்டு உபயோக பொருட்கள் எல்லார் வீட்டிலும் அத்தியாவசியமாக இருக்கிறது. இது போன்ற வீட்டு உபயோக பொருட்களின் தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் முற்போக்காக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமல்லாமல் சுவிட்சுகள் பேன்கள் ஹீட்டர்கள் போன்றவற்றில் தயாரிப்பில் முன்னணி பிராண்டாக திகழ்கிறது Havells. இதன் வரலாறு மற்றும் வெற்றிக்கதை என்ன என்பதை இனி காண்போம்.

பஞ்சாபில் பிறந்து வளர்ந்தவர் கிமாத் ராய் குப்தா. நடுத்தர குடும்பத்தில் பிறந்த குப்தா தொழில் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு வளர்ந்தவர். படிப்பை முடித்த பிறகு டெல்லிக்கு குடி பெயர்ந்த குப்தா டெல்லியின் மின்சார மொத்த சந்தையான பகிரத் பிளேசலில் ரூபாய் 10,000 மூலதனத்துடன் தொழிலை தொடங்கினார். கிராமப்புற இந்தியாவில் ஸ்விட்ச் கியர் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கேபிள்கள் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை விற்பதன் மூலம் அவர் பிரபலமானார்.
அந்த நேரத்தில் 1958 ஆம் ஆண்டு Havells எலக்ட்ரானிக்கல் ராம் காந்தி தொடங்கினார். அப்போது இவரிடம் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி விநியோகஸ்தாராக பணிபுரிந்தார் குப்தா. பின்னர் 1971 ஆம் ஆண்டு ராம்காந்தி குப்தாவிடமே தனது Havells பிராண்டை விற்பனை செய்தார். அப்போது ரூ. 7 லட்சத்திற்கு விற்றார் ராம் காந்தி.
ஏற்கனவே நல்ல ஒரு பெயரோடு இருக்கும் Havells ஐ ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட குப்தா பல திருப்பங்களை உண்டாக்கி இதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார். மின்சாதன உற்பத்தி செயல் முறையில் உலக தரத்திற்கு மாற்றி அமைக்க அவர் ஆலையை நிறுவி பல தரமான மின்சார பொருட்களை விற்பனை செய்து இந்தியாவில் சிறந்த பிராண்டாக Havells ஐ கொண்டு வந்திருக்கிறார்.

தற்போது Havells இந்தியாவில் தரமான பிராண்டாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டு கேபிள்கள் ஒயர்கள் மோட்டார்கள் மின்விசிறிகள் விளக்குகள் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற தயாரிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது குப்தா அவர்களின் மகனான அனில் ராய் குப்தா இதன் தலைவராக இருக்கிறார். இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட விற்பனை கடைகளை கொண்டிருக்கிறது. ஏழு லட்சம் முதல் மூலதனத்துடன் ஆரம்பித்த இந்த Havells தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
