solar

தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில் மின்சாரம் தயாரிக்கும் புதிய முறையை தொடங்கிய மாநகராட்சி… இந்த ஐடியா நல்லா இருக்கே…

By admin on ஐப்பசி 18, 2024

Spread the love

மின்சாரம் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் எதுவுமே இல்லை. மின்சார பயன்பாடு அதிகமாகி விட்டதால் தமிழக அரசு மின்சாரத்தை உற்பத்தி செய்ய சேமிக்க பல வழிகளை கையாளுகிறது.

   

அதன்படி தற்போது மின்சார உற்பத்திக்கு அரசாங்கம் சோலார் முறையை பயன்படுத்தி சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் முறையை தற்போது நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசும் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் சோலார் பேனல்களை அமைத்து அதன் மூலம் வீட்டு மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு மானியமும் வழங்குகிறது.

   

சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதால் நமக்கு செலவு குறையும். ஒவ்வொரு வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் வைத்து அந்த வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு மின்சார கட்டணம் பெரிதாக எதுவுமே கட்ட வேண்டியது இருக்காது. அதுபோல சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை தயாரிக்க கோவை மாநகராட்சி புதிய முறையை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

 

அது என்னவென்றால் கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பெரிய குளத்தில் சோலார் பேனல்களை மிதக்க விட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இதன் மூலம் 140 கிலோ வோல்ட் மின்சாரத்தை சேமிக்க முடியும். தற்போது பெரியகுளம் முழுவதும் சோலார் பேனல்களை மிதக்க விடும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திலேயே இதுபோன்று குளத்தில் சோலார் பேனர்களை மிதக்க விட்டு மின்சாரம் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும்.