நடிகை ஷர்மிளா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷர்மிளா அளித்த பேட்டியில் கூறியதாவது, அந்த காலத்தில் சுபலதா சுமித்ரா.

இவங்க எல்லாருமே ரொம்ப பெரிய பெரிய நடிகைகள். அவங்க கல்யாணம் பண்ண நபர்கள் எப்படியாவது சினிமாவோட சார்ந்தவங்களா இருப்பாங்க. சுபலதா மேடம் கணவர் அம்ரிஷ். ஒரு நடிகை எப்படி இருப்பாங்க அப்படிங்கறது நடிகர்களுக்கு தெரியும்.

சுசித்ரா அம்மாவோட கணவர் ஒரு டைரக்டர். அதனால அவங்களுக்கும் நல்ல தெரியும் ஒரு நடிகனா இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு. அதனால அவங்க கிட்ட இருந்து இந்த அளவு தான் எதிர்பார்க்கலாம் அப்படின்னு அவங்களுக்கு கரெக்டா தெரியும்.

ஆனா ரொம்ப ட்ரெடிஷனலான குடும்பம் அப்படின்னா கல்யாணம்னு வரும்போது நடிகைகள் நிறைய பிரச்சினையை சந்திக்கிறார்கள். இதெல்லாம் வெளியே தெரிந்ததுனால தான் சில நடிகைகள் கல்யாணமே வேண்டாம் அப்படின்னு அவாய்ட் பண்ணிட்டு போயிடறாங்க என சர்மிளா பேசி உள்ளார்.
