இன்றைய சூழ்நிலையில் பலருக்கு மன அழுத்தம் இருக்கிறது. சிலர் வெளியே சொல்வார்கள். சிலர் வெளியே சொல்லாமல் மனதிற்குள் வைத்துக் கொள்வார்கள். ஆனால் பரபரப்பான காலகட்டத்தில் ஒரு அங்கமாக மன அழுத்தம் டிப்ரஷன் ஆகிப்போனது. பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யார் தான் இருக்கிறார்கள். அந்த பிரச்சனைகளை கையாண்டு சமாளித்து மேலே வருபவர்கள் தான் சாதனையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.

அப்படி ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் நம்மளை நாமே புத்துணர்வுடன் வைத்துக் கொள்வதற்கு ஒரு வழி இருக்கிறது. அதுதான் தியானம் செய்வது. தியானம் உங்களை அமைதியாகும். பதட்டத்தை குறைக்கும். எளிதில் டென்ஷன் ஆகுபவர்கள் தியானம் செய்வது மற்றும் உளவியல் ரீதியாகவும் பெரிய பலன்களை அழைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தியானம் செய்வதனால் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதாகவும் பல நோயிலிருந்து வெளிவருவதற்கு அரு மருந்தாகவும் இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தியானம் செய்வதனால் மனம் ஒன்றுபடும். ஆழ்ந்த உறக்கத்தில் கிடைக்கும் அமைதியை விட தியானம் செய்யும் போது கிடைக்கும் நிம்மதியும் அமைதியும் அதிகம். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை தியானம் செய்வதனால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை காணலாம். தியானத்தில் போது மூளையும் மனமும் ஒரு நிலை படுவதால் சுய கட்டுப்பாடு அதிகரிக்கும். உங்களை தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு உதவுகிறது. தியானத்தின் மூலம் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களை எளிதில் இது வெளிக்கொண்டுவரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அனைவருக்கும் பொதுவாக இருக்கும் நோய் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம். தியானம் செய்வதனால் இதயம் சீராக துடிப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. சிலருக்கு மறதி ஏற்படும் அப்படி மறதியாக இருப்பவர்கள் தியானம் செய்யும் போது அது தீரும். சூரிய உதயத்திற்கு முன் காலையில் தியானம் செய்வதால் அற்புத பலன்களை காணலாம். அதீத சக்தியும் பெறலாம். எப்படி நம் உடல் நலனில் அக்கறை கொள்கிறோமோ அதே அளவு மனநலனும் முக்கியம். அதனால் உடலுக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது போல் மனதிற்கு தேவையான தியானமும் செய்ய தொடங்குங்கள்.
