5 வருடத்துக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது…. அட செம்ம மேட்டர சிம்பிளா சொல்லிட்டாரா இசைப்புயல்!

By vinoth on ஐப்பசி 11, 2024

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. தமிழில் அறிமுகமான போதே பாலிவுட் படங்களுக்கும் இசையமைக்கத் தொடங்கினார் ரஹ்மான். அவர் இசை இந்திய அளவில் பெரும்புகழ் பெற்றது. அதனால் இந்திய அளவில் நம்பர் 1 இசையமைப்பாளர் ஆனர்.

   

#image_title

 

ஒரு கட்டத்தில் இந்தியா தாண்டியும் அவர் புகழ் பரவ ஆரம்பித்தது. அப்படிதான் அவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதை அவருக்கு பெற்றுத்தந்தது. அதன் மூலம் ஹாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். இப்படி தன் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறார்.

இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் பேசும்போது “நாம் எப்போதுமே ஒரே நிலையில் தேங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு 5 வருடத்துக்கும் நம் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம்தான் ஏதோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம். அப்போது நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.” என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.