நடிகை மேகா ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படம் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்ததாக வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இவர் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது தெலுங்கில் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சாய் விஷ்ணுவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக புகைப்படங்களுடன் தகவலை பகிர்ந்து இருந்தார் மேகா ஆகாஷ். இவர்கள் இருவரும் பேசினால் போதும் அன்பே என்ற குறும்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

சாய் விஷ்ணுவை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த மேகா ஆகாஷ் கடந்த செப்டம்பர் மாதம் அவரை கரம் பிடித்தார். இவர்களுடைய திருமண மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இவர்களை வாழ்த்தினார். மேலும் சாய் விஷ்ணு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசியின் மகன் ஆவார்.

இந்த நிலையில் தற்போது சாய் விஷ்ணு மற்றும் மேகா ஆகாஷ் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு ஹனிமூனுக்காக இத்தாலி நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மேகா ஆகாஷ் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

