யாரு சொன்னாங்க நான் Unlucky-னு.. ரூ.15,000 கொடுத்தா மட்டும் போதும்… நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்..!

By Nanthini on ஐப்பசி 8, 2024

Spread the love

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியலில் நடித்து புகழ்பெற்றதன் மூலம் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதன்படி முதன் முதலாக மேயாத மான் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ருத்ரன், திருச்சிற்றம்பலம், இந்தியன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடித்த டிமான்டி காலனி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் டெப்பி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

   

இதைத்தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றார். இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் Unlucky என்று யார் சொன்னது. இதுவரை எந்த ஒரு மீடியா சேனலும் அது மாதிரி சொன்னதில்லை. இன்று அனைவருமே யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அதனால் youtube சேனல் நடத்தி வரும் அனைவருமே ஜோர்னலிஸ்ட் கிடையாது. அவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். டிமான்டி காலனி 2 படம் ரிலீஸ் ஆகும் போது கூட ஒரு யூடியூப் சேனல் எங்களிடம் வந்தது. அவங்க கேட்கும் பணத்தை நாம் கொடுத்துவிட்டால் நமக்கு சாதகமாக எழுதுவாங்க.

   

 

அவங்கள பொறுத்த வரைக்கும் கன்டென்ட் என்பதுதான் ரொம்ப முக்கியம். ஒருத்தரப் பத்தி நல்லா வீடியோ போடுவதை விட அவங்கள பத்தி நெகட்டிவா வீடியோ போட்டாதான் ரீச் கிடைக்குது. பொதுவாகவே அந்த சேனல் உடைய விலை 15 ஆயிரம் ரூபாய். அந்தத் தொகையை மட்டும் நாம அவங்க கிட்ட கொடுத்துட்டா நம்பள பத்தி நல்ல விதமா அவங்க போடுவாங்க. அந்த ரேட் தான் அவங்களுக்கு ரொம்ப முக்கியம். நாம் நடிக்கும் படம் மற்றும் நம் வாழ்க்கை பற்றி அனைத்தையும் நல்ல விதமாக அவங்க எடுத்துக்காட்டுவாங்க. இப்படிதான் ஒரு youtube சேனல் எங்க கிட்ட வந்து சேர்ந்தாங்க. அதனால youtube சேனலில் போடுவதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அவங்க ஒன்னும் மீடியா கிடையாது. நான் அன்லக்கி என்று எந்த மீடியாவும் இதுவரைக்கும் சொன்னது இல்ல என்ற ப்ரியா பவானி சங்கர் பேசியுள்ளார்.