இந்தியா பல பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கியது. புண்ணிய பூமியாகவும் ஆன்மீகத்தின் உறைவிடமாகவும் திகழ்கிறது. கிபி ஐந்து 10 15 என ஒன்று பழம் காலம் தொட்டு இருந்த கட்டிடக்கலைகள் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவை அந்த கால மக்களின் வாழ்க்கை முறைகளை நமக்கு சான்றாக எடுத்துக்காட்டுகிறது. இதுதான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்தியாவிற்கு ஈர்க்கிறது. அப்படி இந்தியாவின் பாரம்பரியமிக்க இடங்களில் ஒன்று அஜந்தா குகைகள். அவற்றின் வரலாறு என்ன எப்படி தோன்றியது என்பதை பற்றி இனி காண்போம்.

மகாராஷ்டிரா மாநிலம் மராத்தியர்கள், குப்தர்கள், ஆங்கிலேயர்கள் என பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்ததால் கலாச்சாரங்கள் கலைகள் கட்டிடக்கலைகள் என பலவற்றிலும் சிறப்பு மிகுந்ததாக இருந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் அஜந்தா குடவரை கோயில்கள். மகாராஷ்டிரா மாநிலம் ஓளரங்காபாத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அஜந்தா என்னும் கிராமம்.
அஜந்தா கிராமத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைச்சரிவுகளில் பாறைகளை குடைந்து எடுத்து உருவாக்கப்பட்ட 30 குடைவரை கோயில்கள் இருக்கின்றன. இந்த குடைவரை கோவில்கள் அனைத்தும் மழைக்காலங்களில் புத்தமத துறவிகள் ஓய்வெடுக்கும் உறைவிடங்களாகவும் தியானம் செய்யும் இடங்களாகவும் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு குடைவரை கோவில்களிலும் புத்தரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு வரலாற்று சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் சிற்பங்களும் ஓவியங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் குடவரை கோவில் இருக்கும் ஓவியங்கள் கிமு இரண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை பல்வேறு கட்டங்களாக உருவாகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். முதலில் குடவரை கோவில்கள் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. 1719 ஆம் ஆண்டு கோடை வெயிலில் புலி ஒன்றை துரத்திக்கொண்டு பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித் ஓடிக்கொண்டிருக்கையில் இந்த குகைகள் அவரது கண்ணில் பட்டது. அப்படிதான் இந்த குடைவரைக் கோயில்களை கண்டுபிடித்து மீட்டனர்.

மிகப்பெரிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள் புத்தரின் சிலைகள் கண்கவரும் ஓவியங்கள் என ஒவ்வொரு குகையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அஜந்தா ஓவியங்களில் அடர்ந்த ஆரஞ்சு நீலம் பச்சை போன்ற நிறங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் ஆன பின்பும் அந்த ஓவியங்கள் நிலைத்து நிற்பதற்கு கலைஞர்களின் கைதேர்ந்த நுட்பங்கள் தான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்குள்ள கோயில்களை வரலாற்று சிறப்புமிக்க இடமாக அறிவித்து இந்திய தொல்பொருள் துறையினர் பராமரித்து வருகின்றனர். 1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக அஜந்தா கோயில்கள் ஏற்கப்பட்டு இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அழகும் வசீகராமும் எண்ணில் அடங்கா பிரம்மாண்டங்களையும் பிரதிபலிக்கும் அஜந்தா குகைகளுக்கு இன்று வரை பல சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மகாராஷ்டிரா மாநிலம் செல்லும் போது இந்த கோயில்களை கட்டாயம் சென்று பார்த்து ரசியுங்கள்.
