Chair-அ தூக்கி அடிச்சாங்க.. இப்போ வர சீரியல்கள் பார்க்கவே பிடிக்கல.. பிரபல சீரியல் நடிகை மஞ்சரி ஓபன் டாக்..!!

By admin on ஐப்பசி 7, 2024

Spread the love

நடிகை தேவயானி ஹீரோயின் ஆக கோலங்கள் சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் ஆனந்தி கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் தேவயானியின் தந்தையாக நடித்தவர் நடிகை மஞ்சரி. சீரியலில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அண்ணாமலை சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் மஞ்சரி அளித்த பேட்டியில் கூறியதாவது, சில்ட்ரன் கேன்சர் சொசைட்டி என்ற ஒன்று இருக்கிறது. அங்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பார்கள் அவர்களுக்கு முடி உதிர்ந்து விடும்.

   

அந்த குழந்தைகளுக்காக நிறைய பேர் முடியை தானமாக கொடுப்பார்கள். அந்த சேவைக்காக தான் நானும் எனது முடியை கொடுத்தேன். கோலங்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது நான் கர்ப்பமானேன். இதனால் சீரியலில் இருந்து விலக வேண்டிய கட்டாயம். நான் சீரியலை விட்டு விலகிய பிறகு அனைவரும் மஞ்சரி எங்கே சென்றார். அவரை மீண்டும் கொண்டு வாருங்கள் என கேட்டுக் கொண்டே இருந்தனர்.

   

 

எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலில் இணைந்தேன். அது தைரியமான கதாபாத்திரம். தேவயானி மேடம், டைரக்டர் அனைவரும் சீக்கிரம் திரும்பி வா ரசிகர்களை சமாளிக்க முடியவில்லை என சொன்னார்கள். அண்ணாமலை சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்தேன். ஒரு பொது நிகழ்ச்சிக்கு நான் சென்றேன். அப்போது சிலர் என்னை நோக்கி சேரை தூக்கி எறிந்தார்கள். அது என் மண்டையில் வந்து விழுந்தது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பிடித்தது.

நான் இந்தியாவுக்கு வந்து எட்டு வருடம் ஆகிவிட்டது. இப்போது இருக்கும் சீரியல்களை பார்க்கவே பிடிக்கவில்லை. அந்த சீரியல்களில் எதார்த்தமே இல்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் பட்டுப்புடவை நகைகள் அணிந்து கொண்டே இருப்பார்களா? அதை போட்டுக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்த சீரியலில் எதார்த்தம் என்பது இல்லை. அது மட்டும் இல்லாமல் சீரியலை ஜவ்வாக இழுக்கிறார்கள். அதனால் நான் சீரியல் பார்க்க மாட்டேன். ஒரு நல்ல கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன் என மஞ்சரி கூறியுள்ளார்.